Tamil New Year Event 2024
Tamil New Year Event 2024: திரு.கோபிநாத் உடனான பிரத்யேக இரவு உணவு நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. திரு.கோபிநாத் அவர்களுடன் பிரத்யேக இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. Please check the Highlight of our Exclusive Dinner Event with Mr.Gopinath. நமது TAGDV நடத்திய சித்திரைத் திருவிழாவின் சிறப்பு அம்சமான "சூப்பர் டான்சர் நடனப் போட்டிகள்" மிகவும் விமரிசையாக நடந்தேறியது. 256 பங்கேற்பாளர்கள் 38 அணிகளாகக் கலந்து கொண்டு முந்தைய ஆண்டு சாதனைகளை முறியடித்தனர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கண்கவர் உடைகளுடன் நடமாடி பார்ப்பவர் அனைவரையும் வியக்க வைத்தனர். முழு நிகழ்ச்சியும் ஒரு “விஷுவல் ட்ரீட்” ஆக அமைந்தது. வெற்றியாளர்களைத் தீர்மானிக்க நடுவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. இந்நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்த பங்கேற்பாளர்கள், பெற்றோர்கள், பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள்/ஆசிரியர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். நிகழ்ச்சி தொடங்கி "Check-in" முதல் சுத்தம் செய்வது வரை எல்லாப் பணிகளிலும் எங்களுக்கு உதவிய அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க உதவிய எங்கள் “Youth Volunteers” அனைவருக்கும் ஒரு பெரிய கைதட்டல். நமது சித்திரை நிகழ்வின் சிறப்பு அம்சமாக விஜய் டிவி பிரபல நட்சத்திரம் திரு.கோபிநாத் தொகுத்து வழங்கிய "நீயா நானா" விவாத நிகழ்ச்சி. தலைப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மற்றும் இரு அணிகளுடன் சிந்தனையைத் தூண்டும் வேடிக்கையான, ஆரோக்கியமான விவாதத்தை நடத்தினார். கோபிநாத்தின் நேரத்துக்கு ஏற்ற நகைச்சுவை மற்றும் எதிர் உரையாடல்களால் அரங்கமே சிரிப்பலையால் நிரம்பி வழிந்தது. Super Dancer Competition Results: Age 4 to 6 Non Classical Prize 1 23ம் புலிகேசி 2.0 குட்டி கடற்கன்னிகள் Prize 2 மின்னும் மொட்டுக்கள் அவளும் நானும் குட்டி பாவைகள் Prize 3 Middletown Tamil Palli - Chutties Kutties மழலை வீரர்கள் வெந்தோகை Age 7 to 8 Non Classical Prize 1 Bell Bottom Band Vedanthangal chittugal Prize 2 Pennsylvania Rockers குட்டி காவடி Prize 3 Sema Suro's லிட்டில் டார்சான்ஸ் மாயோ (Maayo) Age 9 to 10 Non Classical Prize 1 கால பயணிகள்: Time Travellers நாட்டுப்புற சங்கமம் Prize 2 செவ்வானம் தமிழ் கலை சிறகுகள் Prize 3 Middletown Tamil Palli - Boys Ulla Urvashigal-Girl power Age 11 to 13 Non Classical Prize 1 Radhaiyin Thedal Vaanavilin Vanangal Prize 2 கெட்ட பயலுக Prize 3 Nattiya Malagal Tamil Nachatirangal Age 14 to 17 Non Classical Prize 1 வண்ண மயில்கள் Age 18+ Non Classical Prize 1 Varuthapadatha 90s sangam நளின தாரகைகள் Prize 2 ஃபீனிக்ஸ் பாவைகள் Prize 3 Minmini Pengal Age 7 to 9 Classical Prize 1 Murugan Sabdam Age 10 to 13 Classical Prize 1 Kumara Kavuthuvam Age 18+ Classical Prize 1 Rhythmic beats Special Prize முழவு கலைக்குழு