TAGDV Tamil Literary Event – சங்க காலத்தில் தமிழர்களின் வணிகங்களும் அதன் எல்லைகளும்

TAGDV’ன் சங்க இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது. TAGDV’ன் பேச்சாளர்கள் சங்க இலக்கியத்தை மேற்கோள் காட்டி தமிழர்களின் வணிகத்தைப் பற்றி சிறப்பாக உரையடினார்கள்.
முனைவர் பாரதி. ச, கடல் கடந்த வணிகம் பற்றியும், திருமதி. அல்லி ந, நிலம் சார்ந்த (தினைகள்) வணிகம் பற்றியும் , திரு. குமார் தி, வணிக போக்குவரத்து சாதனங்கள் பற்றியும், முனைவர் மனோகரன், இரா தமிழர்களின் வணிக அறத்தை பற்றியும் சிறப்பாக பேசினர்.
FETNA அமைப்பில் இருந்து திரு.குழந்தைவேலு மற்றும் நாஞ்சில் பீட்டர் அவர்களின் வருகையும் சில நிமிட பேச்சும் TAGDV குழுவினருக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக கவிஞர். கனகராசன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் TAGDV ன் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
To view this Literary event on Youtube, click here