Annual Sports Day Event
2024 செப்டம்பர் 14 அன்று TAGDV வருடாந்திர விளையாட்டு தினத்தை (Sports Day) நடத்தியது. இதில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தது: ஆண்கள் வாலிபால், பெண்களுக்கான த்ரோபால் மற்றும் TAGDV உறுப்பினர்களின் குழந்தைகள் விளையாட்டு தினம்.
வாலிபால் போட்டியில் பென்சில்வேனியா, டெலாவேர், நியூ ஜெர்ஸி ஆகிய மாநிலங்களில் இருந்து 10 அணிகள் பங்கேற்றன. இதில் Falcon அணி வெற்றி கோப்பையை வென்றது, மற்றும் Mechanicsburg Strikers அணி இரண்டாம் இடத்தை பெற்றது.
பெண்கள் த்ரோபால் போட்டியில் மூன்று அணிகள் பங்கேற்றன. இதில் PSC Rockers அணி வெற்றி கோப்பையை வென்றது, மற்றும் Thillana Vibes அணி இரண்டாம் இடத்தை பெற்றது.
குழந்தைகள் விளையாட்டு தினத்தில் சுமார் 90 குழந்தைகள் 50 meter/ 100 meter ஓட்டப் பந்தயம், எலுமிச்சை மற்றும் கரண்டி(lemon & spoon), பைபந்தயம்(Sack race), 4×100 மீட்டர் ஓட்டம் (relay) போன்ற போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மழலையர்கள் முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றதை காண ஆழ்ந்த மகிழ்ச்சி அளித்தது.
Click here to watch the Highlights of TAGDV Annual Sports Day Event
Leave A Comment