Announcement from Sangamam Editorial Team

வணக்கம்!!
தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும் உறுப்பினர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் நம் தமிழ்ச்சங்கத்தில் இருந்து சங்கமம் இதழ் வெளியிடப்படுகிறது.

கீழ்கண்ட தலைப்புகளில் இருந்து தமிழில் கட்டுரை, நூல் பரிந்துரை, தொடர்கள், கவிதை, சிறுகதை, இலக்கியத்தில் நகைச்சுவை, நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் ஓவியம் ஆகிய படைப்புகளை அனுப்பலாம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தி குழந்தைகள் தாங்களே உருவாக்கும் படைப்புகளை மட்டுமே அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

படைப்புகளுக்கான விதிகள் :
1. படைப்புகள் அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும்.
2. சுதந்திர பேச்சுரிமையை மதிக்கும் அதே வேளையில், உங்கள் படைப்புகள் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இருக்க கூடாது.
3. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
4. படைப்புகள் அனைத்தும் மூன்று பக்கத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. படைப்புகள், கருத்துகள் மற்றும் கேள்விகள் sangamam@tagdv.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
6. படைப்புகள் அனைத்தும் ஜூன் (June) 30, 2023 தேதிக்குள் அனுப்ப வேண்டுகிறோம்.

படைப்புகள் பிரசுரிக்கபடுவது சங்கமம் ஆசிரியக் குழுவின் முடிவுக்கு உட்பட்டது. உங்கள் ஆதரவையும் படைப்புகளையும் ஆசிரியக் குழு ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

Greetings TAGDV members! Sangamam Magazine is published by our Tamil Sangam to promote interest in Tamil language and showcase the talents of the members.

We will be accepting contributions such as Essay, Book recommendation, poetry, short story, comedy in literature, folk songs and drawings in Tamil can be sent from the below suggested topics.

We also ask parents to encourage their children to send only works that the children create themselves. Please e-mail your contributions to our editorial committee at the following e-mail address: sangamam@tagdv.org

Contributions are subjected to following rules: 
1. Content should be appropriate for all age groups.
2. While respecting the right to free speech, content should not offend anyone.
3. Submissions should be your original content.
4. Submissons may not exceed three pages.
5. Submissions,comments and questions can be sent to email id: sangamam@tagdv.org.
6. Submissions should reach by June 30, 2023.

Publication of articles is subject to the decision of the Sangamam editorial committee.We eagerly await your support and contributions.

Suggested Topics / பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் 
1. சிறு கதைகள்
2. சங்க இலக்கியம் பாடல்கள் மற்றும் கட்டுரைகள்
3. நவீன இலக்கியம்
4. அறிவியல் தமிழ்
5. கவிதைகள்
6. சிறுவர் பக்கம்
6.1. சிறுவர் இலக்கியம்
6.2. சிறுவர் கதைகள்
6.3. சிறுவர் ஓவியம்
7. தமிழர் பாரம்பரியம்
7.1 பாரம்பரிய விடுகதைகள்
7.2 நாட்டுப்புறப் பாடல்
8. புலனம் (whatsapp), வலை தளம் (website) / கீச்சகம் (twitter) படித்ததில் பிடித்தது
9. வார்த்தை விளையாட்டு (குறுக்கு எழுத்து)
10. சமையல் குறிப்புக்கள்
11. கேள்விகள் / பதில்கள்