TAGDV இன் 2024 தைப் பொங்கல் கொண்டாட்டம். இனிதே நடந்தேறியது! போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று சிறப்பித்த அனைவருக்கும் செயற்குழுவின் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்!
TAGDV இன் தன்னலமற்ற தன்னார்வலர்களுக்கு ஒரு சிறப்பு வணக்கம்.
TAGDV குழந்தைகள் பங்குப் பெற்ற கலை மற்றும் நடன நிகழ்ச்சிகளும், முழவு குழுவினரின் மயக்கும் பறை நிகழ்ச்சியும், மகளிர் அணியினரின் முளைப்பாரி ஊர்வலமும் மற்றும் கும்மியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
முன்னாள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் முன்னாள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, ஒற்றுமை உணர்வை வளர்க்கும் வகையில் மேடை அமைந்தது.
கலை, நடன நிகழ்ச்சிகள் என களைக்கட்டிய நிகழ்ச்சிகள் நிறைவாக ” Vijay TV Super Singer” நிகழ்ச்சியின் வெற்றித் தம்பதியான ராஜலக்ஷ்மி – செந்தில் கணேஷ் மற்றும் அவர்கள் குழுவினரின் தமிழிசை – இன்னிசை – திரையிசைப் பாடல்களின் இனிமையில் மயங்கித்திளைக்கும் வண்ணம் அமைந்தன. சிறிய குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் இரண்டரை மணி நேரம் இருக்கைகளை விட்டகலாது நிகழ்ச்சிகளைக் கண்டு களித்ததோடு மட்டுமின்றி, அவர்கள் மேடையேறி நடனமாடும் வகையில் ராஜலக்ஷ்மி – செந்தில் தம்பதியினர் தங்கள் இசை நிகழ்ச்சியை வழங்கியது அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ததும்பச்செய்தது.
Leave A Comment