General

Home/General

TAGDV சங்கமம் பொன்விழா சிறப்பு மலர்

TAGDV-யின் 50ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி நமது சங்கம் கடந்துவந்த மைல்கற்களை முன்னிலைப்படுத்தி "சங்கமம் பொன்விழா சிறப்பு மலர்" வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். பொன்விழா சிறப்பு மலர் அச்சிடப்பட்ட பதிப்பாகவும், உங்கள் வீட்டு நூலகத்தில் இடம் பெறும் விதமாகவும் அமைய இருக்கிறது. இந்த மலரில் பிரசுரிக்க கீழ்கண்ட பிரிவுகளில் தங்கள் படைப்புகளை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அழைக்கின்றோம். TAGDV பற்றிய வரலாற்று கட்டுரைகள் (2 பக்கங்களுக்கு மிகாமல்) பொதுவான கட்டுரைகள் (2 பக்கங்களுக்கு மிகாமல்) அசல் கவிதைகள் (1 பக்கத்துக்கு மிகாமல்) சிறுகதைகள் (4 பக்கங்களுக்கு மிகாமல்) ஆளுமையுடன் நேர்காணல் (2 பக்கங்களுக்கு மிகாமல்) புத்தகம் அறிவோம் - நீங்கள் படித்த சிறந்த புத்தகம், அதை மற்றவர்கள் ஏன் படித்தல் வேண்டும் என்று சுருக்கமாக எழுதி அனுப்பவும் சித்திரமும் கைப்பழக்கம் - TAGDV வரலாறு பற்றிய வரைபடம் TAGDV வரலாற்று புகைப்படங்கள் கீழ்காணும் தலைப்புகளைத் தழுவி தங்கள் படைப்புகள் இருக்கலாம் நமது சங்கத்தில் வரலாற்று நிகழ்வுகள் நமது சங்கம் கடந்துவந்த பாதை தமிழ் சமுதாயத்திற்கு TAGDV-யின் பங்களிப்பு இயற்கை வேளாண்மை நீர் இன்றி அமையாது உலகு உணவே மருந்து / சித்த மருத்துவம் நோய் நாடி நோய் முதல் நாடி வியக்கவைக்கும் தமிழ் கட்டிடக்கலை பண்டைய தமிழர்களின் தொழில்நுட்பம் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்புகள் பொது விதிமுறைகள் சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் அசலாகவும், வேறு எங்கும் வெளியிடப்படாததாகவும் இருக்கவேண்டும் படைப்புகள் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்கலாம். தமிழில் அனுப்பும் படைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் சாதி, மதம், அரசியல் சார்ந்தோ, தனி நபரை புண்படுத்தும் வகையிலோ இருத்தல் கூடாது. படைப்புகளை பிரசுரிப்பது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது படைப்புகளை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். முன் வரும் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் டெலவர் பெருநிலத் தமிழ்ச் சொந்தங்களுக்கு சங்கமம் பொன்விழா சிறப்பு மலர் அச்சிடப்பட்ட பதிப்பாக சென்றடையும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிபடுத்துங்கள். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@tagdv.org சங்கமம் இதழில் விளம்பரம் செய்ய விரும்பினால் marketing@tagdv.org என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகவும்.   தமிழில் தட்டச்சு செய்ய: ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும்  https://www.google.com/intl/ta/inputtools தட்டச்சு மற்றும் சந்திப்பிழைத் திருத்தங்கள் செய்ய - dev.neechalkaran.com/p/naavi.html

By |2021-09-25T10:11:03-04:00September 25th, 2021|General|0 Comments

2021-22 பள்ளி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம்

TAGDV தமிழ்ப்பள்ளிகளின் 2021-2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இனிதே தொடங்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.   அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை உங்கள் பகுதயில் உள்ள TAGDV தமிழ்ப் பள்ளியில் பதிவு செய்து தமிழ் மொழியை கற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.   இந்த வருடம் பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க, டெலவர் தமிழ்ப்பள்ளியின் புதிய கிளை மிடில்டவுன் (Middletown, DE) பகுதியில் திறக்கப்பட உள்ளது. 2020-21 மாணவர் பதிவு செய்வதற்கான இணைப்புகள் இங்கே 1. பிளைமத் மீட்டிங் தமிழ்ப்பள்ளி 2. எக்ஸ்டன் தமிழ்ப்பள்ளி 3. டெலவர் தமிழ்ப்பள்ளி (வில்மிங்டன் & மிடில்டவுன்) பள்ளியின் முதல் வாரத்தில் புத்தகங்களைப் பெற அடுத்த இரண்டு வாரங்களில் பதிவு செய்யுங்கள். இந்த தருணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் (2019-2021) TAGDV தமிழ்ப்பள்ளிகளை மிக நேர்த்தியாக வழிநடத்திய பள்ளிகளின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும், புதிதாக பதவி ஏற்றுள்ள நிர்வாக குழு (2021-23) உறுப்பினர்களுக்கும் டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

By |2021-08-14T20:33:45-04:00July 26th, 2021|General|0 Comments

Help TN Breathe – Thanks

வணக்கம்,   All of us are aware of the second wave of COVID which continues to spread across India affecting Tamil Nadu as well. The future has never felt so unpredictable. These are challenging times for us all, and we hope you’re in good spirits and health!   Tamil Association of Greater Delaware Valley (TAGDV) has joined hands with FETNA, TNF, ATEA, ATMA, CTA, IIT MANNA and other organizations to provide services to our community back in Tamil Nadu.   Thank you all for your donations. 🙏🏻🙏🏻🙏🏻 We would like to inform you that TAGDV has received $7800 for the HelpTNBreathe Fundraiser. Your contribution means a lot and goes a long way to supporting our mission. Thank you for being part of our community. Without you, none of this is possible. Stay safe and well.   We have currently closed the helpTNBreathe fundraiser. If you would like to make a donation and support our COVID19 relief efforts, please reach out to us at hello@tagdv.org.  

By |2021-05-17T14:20:22-04:00May 17th, 2021|General|0 Comments

Help TN Breathe

வணக்கம்,   All of us are aware of the second wave of COVID which continues to spread across India affecting Tamil Nadu as well. The future has never felt so unpredictable. These are challenging times for us all, and we hope you’re in good spirits and health!   We would like to inform you that Tamil Association of Greater Delaware Valley (TAGDV) is joining hands with FETNA, TNF, ATEA, ATMA, CTA, IIT MANNA and other organizations to provide services to our community back in Tamil Nadu.   While there’s a lot of uncertainty, we know that we need to adapt fast to the changing reality. Now, more than ever, people in Tamil Nadu need us. And we need you. So we appeal to all members to contribute to this fundraiser.   Please donate generously using our exclusive TAGDV payment link provided in this flyer. https://tagdv.org/helpTNBreathe Also, you can advocate for us by sharing our mission with a family member or friend. Even a quick mention on your social media would mean the world to us. In times like this, we’re reminded of how interconnected we all are.   Thank you for being part of our community. Without you, none of this is possible. Stay safe and well.   Note: 1. TAGDV is a registered, non-profit 501(c) (3) Tax Exempt organization. Receipts will be provided for all donations. 2. Please check with your employer and see if they will match your donation. 3. Please note all the donations from this fundraiser will get doubled by matching contributions from IITM Foundation.

By |2021-05-07T13:47:25-04:00May 7th, 2021|General|0 Comments

TAGDV சித்திரை புத்தாண்டு விழா 2021

டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம் வழங்கும் "சித்திரை புத்தாண்டு விழா 2021" ஏப்ரல் 24, 2021 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு (கிழக்கு நேரம்) இணையம் மூலம் கோலாகலமாக நடைபெற்றது நிகழ்ச்சியின் பதிவு இங்கே https://www.youtube.com/watch?v=X3s4ZWEliqY   விழாவின் சிறப்பு அம்சங்கள் மாறுவேடப் போட்டி திருக்குறள் போட்டி இசைக் கருவி வாசித்தல் போட்டி சிறப்பு பட்டிமன்றம்   “தேவை ஒரு பாவை” டொராண்டோ-வை சார்ந்த மிஸ்ஸிசாக குழுவினரின் நகைச்சுவை நாடகம்

By |2021-04-24T19:33:57-04:00April 24th, 2021|General|0 Comments

TAGDV பொங்கல் விழா 2021

டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் 2021-ஆம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக "பொங்கல் விழா" சனவரி 30, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு (EST) இணையம் மூலம் கோலாகலமாக நடைபெற்றது நிகழ்ச்சியின் நேரடி பதிவு இங்கே https://www.youtube.com/watch?v=RrDTsk0q3xo   விழாவின் சிறப்பு அம்சங்கள் மக்களிசையும் பொங்கலும் மதுரை கூடல் கலைக்குழுவினரின் சிறப்பு நிகழ்ச்சி மதுரையிலிருந்து நேரலையில்... தமிழுக்கு அமுதென்று பேர் பர்வின் சுல்தானா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு கலைநிகழ்ச்சிகள் TAGDV தமிழ்ப்பள்ளி குழந்தைகள் மற்றும் சங்க உறுப்பினர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

By |2021-02-03T16:50:48-05:00January 31st, 2021|General|0 Comments

2020 accomplishments

2020 has been a transformational year for TAGDV overlaid with a challenging year for all of us due to COVID-19. We appreciate our community's resilience and continued support to TAGDV. Like any massive organization with a rich 50 years of history, we have faced challenges and EC has been working hard with a focus on what is best for the TAGDV members, Tamil School students and overall long term success of the organization. We are looking forward to a great year 2021. TAGDV wishes you all and your loved ones a very happy and prosperous New Year! வணக்கம், உலகமே ஒரு அசாதாரண சூழலில் இருந்த போதிலும், பல இன்னல்களுக்கு இடையே பொன்விழா ஆண்டில் தன் சேவையை TAGDV தொடர்ந்து வழங்கி வருகிறது. உங்கள் அனைவரின் பேராதரவோடு சங்க உறுப்பினர்கள் பயன் பெரும் விதமாக TAGDV பல நிகழ்ச்சிகளை அளித்துள்ளது. அவற்றில் சில குறிப்பிடத்தக்க சாதனைகள் இதோ   TAGDV பள்ளிகள் இணையவழிக் கல்வியை அறிமுகப்படுத்தி, தடையின்றி பள்ளியை இயங்கச் செய்துள்ளது. மாணவர்கள் இணைய வழியாகப் பாடம் மற்றும் பயிற்சிகள் செய்ய உள்கட்டமைப்பு செய்துள்ளது. ​Microsoft Teams செயலியை பயன்படுத்தச் செய்து செலவைக் குறைத்துள்ளது. நிதி திரட்டல் PA/DE உள்ளூர் மற்றும் புறநகர் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்க நிதி திரட்டியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நலிவுற்ற கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்க நிதி திரட்டியுள்ளது. சங்கமம் மலர் TAGDVயின் 2020-ஆம் ஆண்டு இதழான சங்கமம் மலரை மென்பிரதி வடிவில் வெளியிட்டுள்ளது. சங்க நிகழ்வுகளை உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் (29 மின்னஞ்சல்கள்) மூலம் தொடர்ந்து தெரிவித்துள்ளது. FB மூலமாகவும் தகவல்களை பரிமாறி வருகிறது. பொங்கல் விழா 2020ம் ஆண்டின் பொங்கல் விழாவை பாரம்பரிய நடை மாறாமல் கிராமியப் பாணியில் தனித்துவமாக அலங்கரித்த தேநீர் கடை, கரும்புச்சார் கடை, பூ கடை, சிற்றுண்டியகம் மற்றும் பல கடைகள் உள்ள அங்காடி தெரு, அனைவரும் பயன் பெரும் வகையில் அமையப் பெற்றது. இளைய தலைமுறைகள் நமது விவசாய கலாசாரத்தை தெரிந்து கொள்ளும் விதமாக முளைப்பாரி அணிவகுக்க ஏற்பாடு செய்தோம். முதன் முறையாக அறிமுகம் செய்த இந்த நிகழ்ச்சியில் 60கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உற்சாகமாகப் பங்கேற்றனர். பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு பலரது பாராட்டையும் பெற்றது. இணைய வழி நிகழ்ச்சிகள் 15 நிகழ்ச்சிகளை இணைய வழியாக கட்டணமின்றி உறுப்பினர்கள் பயன்பெறும் விதத்தில் நடத்தியுள்ளது. பல்வகை கல்லூரி ஆயத்தப் பட்டறைகள், கல்லூரி சேர்க்கைக்கான ஆலோசனை, பொருளாதார மேம்பாடு பற்றிய ஆலோசனை, COVID விழிப்புணர்வு, குடியேற்றச்சட்டம் சார்ந்த ஆலோசனை மற்றும் இலக்கியம் சார்ந்த சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளது. TAGDV "தனித்திறன் போட்டி” மற்றும் "தினம் ஒரு திருக்குறள்" போன்ற போட்டியில் சங்க உறுப்பினர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். மற்ற செயல்கள் TAGDV பொன்விழா ஆண்டிற்கான அடையாளச் சின்னம்(LOGO) உருவாக்கப்பட்டது. உள்ளூர் அரசியல் பிரதிநிதி/சட்ட வல்லுனர்களிடம், H4/L2 மாணவர்களுக்கான கல்விக்கட்டண உதவித்தொகை மற்றும் GC சீர்திருத்தம் பற்றிய ஆலோசனை/முன்னெடுப்பு. சங்க உறுப்பினர்களுக்கான அவசர உதவி சேவை அறிமுகம். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அனைத்து நிகழ்ச்சிகளும் பொன்விழா நிகழ்ச்சிகளாக நடத்தப்படுகின்றன. 2020-ஆம் ஆண்டு முற்று பெற்று 2021-ஆம் ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டு பிறக்கும் போது புதிய உற்சாகமும், புத்தெழுச்சியும், அமைதியும், நல்லிணக்கமும் தழைத்து, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென வாழ்த்துகிறோம். வாழிய நற்றமிழ்! வாழிய நற்றமிழர்! வாழிய வாழியவே! நன்றி, செயற்குழு உறுப்பினர்கள், டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்

By |2020-12-31T20:41:19-05:00December 31st, 2020|General|0 Comments
Load More Posts