இன்றைய TAGDV திருக்குறள் நாளில் அதிநந்த் அவர்கள் மழலை தமிழில் வழங்கும்
திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய அதிநந்திற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

குறள்
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

விளக்கம்
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.