TAGDV-யின் 50ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி நமது சங்கம் கடந்துவந்த மைல்கற்களை முன்னிலைப்படுத்தி “சங்கமம் பொன்விழா சிறப்பு மலர்” வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். பொன்விழா சிறப்பு மலர் அச்சிடப்பட்ட பதிப்பாகவும், உங்கள் வீட்டு நூலகத்தில் இடம் பெறும் விதமாகவும் அமைய இருக்கிறது.
இந்த மலரில் பிரசுரிக்க கீழ்கண்ட பிரிவுகளில் தங்கள் படைப்புகளை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அழைக்கின்றோம்.
- TAGDV பற்றிய வரலாற்று கட்டுரைகள் (2 பக்கங்களுக்கு மிகாமல்)
- பொதுவான கட்டுரைகள் (2 பக்கங்களுக்கு மிகாமல்)
- அசல் கவிதைகள் (1 பக்கத்துக்கு மிகாமல்)
- சிறுகதைகள் (4 பக்கங்களுக்கு மிகாமல்)
- ஆளுமையுடன் நேர்காணல் (2 பக்கங்களுக்கு மிகாமல்)
- புத்தகம் அறிவோம் – நீங்கள் படித்த சிறந்த புத்தகம், அதை மற்றவர்கள் ஏன் படித்தல் வேண்டும் என்று சுருக்கமாக எழுதி அனுப்பவும்
- சித்திரமும் கைப்பழக்கம் – TAGDV வரலாறு பற்றிய வரைபடம்
- TAGDV வரலாற்று புகைப்படங்கள்
கீழ்காணும் தலைப்புகளைத் தழுவி தங்கள் படைப்புகள் இருக்கலாம்
- நமது சங்கத்தில் வரலாற்று நிகழ்வுகள்
- நமது சங்கம் கடந்துவந்த பாதை
- தமிழ் சமுதாயத்திற்கு TAGDV-யின் பங்களிப்பு
- இயற்கை வேளாண்மை
- நீர் இன்றி அமையாது உலகு
- உணவே மருந்து / சித்த மருத்துவம்
- நோய் நாடி நோய் முதல் நாடி
- வியக்கவைக்கும் தமிழ் கட்டிடக்கலை
- பண்டைய தமிழர்களின் தொழில்நுட்பம்
- புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்புகள்
பொது விதிமுறைகள்
- சமர்ப்பிக்கப்படும் படைப்புகள் அசலாகவும், வேறு எங்கும் வெளியிடப்படாததாகவும் இருக்கவேண்டும்
- படைப்புகள் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்கலாம். தமிழில் அனுப்பும் படைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
- சாதி, மதம், அரசியல் சார்ந்தோ, தனி நபரை புண்படுத்தும் வகையிலோ இருத்தல் கூடாது.
- படைப்புகளை பிரசுரிப்பது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது
- படைப்புகளை வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். முன் வரும் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சொந்தங்களுக்கு சங்கமம் பொன்விழா சிறப்பு மலர் அச்சிடப்பட்ட பதிப்பாக சென்றடையும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிபடுத்துங்கள்.
சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@tagdv.org
சங்கமம் இதழில் விளம்பரம் செய்ய விரும்பினால் marketing@tagdv.org என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகவும்.
தமிழில் தட்டச்சு செய்ய: ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும் https://www.google.com/intl/ta/inputtools
தட்டச்சு மற்றும் சந்திப்பிழைத் திருத்தங்கள் செய்ய – dev.neechalkaran.com/p/naavi.html
Leave A Comment