இவ்வாண்டு பொன்விழா காணும் நமது TAGDV, சங்கமம் பொன்விழா சிறப்பு மலர் வெளியிடவுள்ளது. சங்கமம் பொன்விழா சிறப்பு மலரில் பிரசுரிக்க கீழ்க்கண்ட பிரிவுகளில் தங்கள் படைப்புக்களை வரும் சூலை 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
* குறிப்பு – முன் வரும் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் *
பொது விதிமுறைகள்
சாதி, மதம், அரசியல் சார்ந்தோ, தனி நபரை புண்படுத்தும் வகையிலோ இருத்தல் கூடாது.
தலைப்பு எடுத்துக்காட்டு
- தமிழ் கலைகள், கலாச்சாரம் அல்லது பாரம்பரியம்
- எனது ஊர்
- விவசாயத்தின் முக்கியத்துவம்
- நம் பழம்பெரும் பாரதத்தின் சிற்றரச ஆளுமைகள்
- பெரிதும் அறியப்படாத அல்லது அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் கண்டுபிடிப்புகள்
- கொரோணா கற்றுக் கொடுத்த வாழ்க்கை பாடம்
மேற்கண்ட தலைப்புகளை தழுவியோ, கருத்துள்ள அல்லது வளரும் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை பற்றியோ தங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
பின்வரும் படைப்புகளை சமர்ப்பிக்கலாம்
- சிறுகதை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)
- கட்டுரை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)
- கவிதை (1 பக்கத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)
- புத்தகம் அறிவோம் – நீங்கள் படித்த சிறந்த புத்தகம், அதை மற்றவர்கள் ஏன் படித்தல் வேண்டும் என்று 4 – 6 வரிகளுக்கு மேல் மிகாமல் எழுதி அனுப்பவும்
- சிரிக்கலாம் வாங்க… (குறு நகைச்சுவை துணுக்குகள்)
- படம் வரைந்து கதை சொல் (4 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)
* படைப்புக்களை பிரசுரிப்பது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.*
போட்டிகள்:
-
- ஓவியம் வரைதல்:
- A4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.
- ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 2 ஓவியங்கள் பொன்விழா மலரில் பிரசுரிக்கப்படுவதோடு, பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
- பிரிவு 1 : 6 வயது வரை
- பிரிவு 2 : 6 – 9 வயது வரை
- பிரிவு 3 : 9 – 12 வயது வரை
- பிரிவு 4 : 12 – 15 வயது வரை
- பிரிவு 5 : 15 – 18 வயது வரை
- பிரிவு 6 : 18 வயதுக்கு மேல்
- ஓவியம் வரைதல்:
- கோலப் போட்டி:
- A4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம்
- தமிழ்க் கோலங்கள் – தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 கோலங்கள் பிரசுரிக்கப்படும். அத்துடன் பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நமது சங்கமம் மலர் சென்றடையும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிபடுத்துங்கள்.
படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி: editor@tagdv.org
தமிழில் தட்டச்சு செய்ய: ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும் https://www.google.com/intl/
தட்டச்சு மற்றும் சந்திப்பிழைத் திருத்தங்கள் செய்ய – dev.neechalkaran.com/p/naavi.
Nice article ! Thank you.. Xaviera Jareb Soracco
I have read several excellent stuff here. Definitely price bookmarking for revisiting. I wonder how so much attempt you place to make such a excellent informative web site. Alix Manfred China