இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மதுரை, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கிவருகிறது. அதற்கு சான்றுகளாக குகை ஓவியங்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்பிராமிக் கல்வெட்டுகள், வடமொழி & பிறநாட்டறிஞர் குறிப்புக்கள், நாட்டுப்புறப் பாடல்கள் திகழ்கின்றன. மதுரையை சுற்றியுள்ள குன்றுகளில் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக அங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இச்சிறப்பை சான்றுகளோடு விளக்க, இலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியில் பல விஷயங்களை ஆராய்ந்துள்ள பேராசிரியர் ராஜ் முத்தரசன் அவர்கள் கடந்த ஆண்டு மதுரை சுற்றுப்பயணத்தில் தான் பார்த்ததை, படித்ததை, ஆராய்ந்ததை நம்மோடு பகிர உள்ளார்.

வாருங்கள் இந்த பின்னோக்கியப் பயணதில் அந்த காலச்சுவடுகளை அறியலாம். மதுரையில் சமணம் – ஒரு காலப்பயணம்.

July 11, 2020, சனி மாலை 4 மணி