இன்றைய TAGDV திருக்குறள் நாளில் வர்ஷா அவர்கள் வழங்கும் திருக்குறளை கேட்டு மகிழ்வோம். இந்த அழகிய திருக்குறளை வழங்கிய வர்ஷா-க்கு வாழ்த்துக்களும் நன்றியும்

குறள்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

விளக்கம்
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாக எண்ணிக் காத்தல் வேண்டும்.