சங்கமம் பொன்விழா சிறப்பு மலர்
இவ்வாண்டு பொன்விழா காணும் நமது TAGDV, சங்கமம் பொன்விழா சிறப்பு மலர் வெளியிடவுள்ளது. சங்கமம் பொன்விழா சிறப்பு மலரில் பிரசுரிக்க கீழ்க்கண்ட பிரிவுகளில் தங்கள் படைப்புக்களை வரும் சூலை 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். * குறிப்பு - முன் வரும் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் * பொது விதிமுறைகள் சாதி, மதம், அரசியல் சார்ந்தோ, தனி நபரை புண்படுத்தும் வகையிலோ இருத்தல் கூடாது. தலைப்பு எடுத்துக்காட்டு தமிழ் கலைகள், கலாச்சாரம் அல்லது பாரம்பரியம் எனது ஊர் விவசாயத்தின் முக்கியத்துவம் நம் பழம்பெரும் பாரதத்தின் சிற்றரச ஆளுமைகள் பெரிதும் அறியப்படாத அல்லது அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் கண்டுபிடிப்புகள் கொரோணா கற்றுக் கொடுத்த வாழ்க்கை பாடம் மேற்கண்ட தலைப்புகளை தழுவியோ, கருத்துள்ள அல்லது வளரும் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை பற்றியோ தங்கள் படைப்புகளை அனுப்பலாம். பின்வரும் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் சிறுகதை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) கட்டுரை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) கவிதை (1 பக்கத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) புத்தகம் அறிவோம் - நீங்கள் படித்த சிறந்த புத்தகம், அதை மற்றவர்கள் ஏன் படித்தல் வேண்டும் என்று 4 - 6 வரிகளுக்கு மேல் மிகாமல் எழுதி அனுப்பவும் சிரிக்கலாம் வாங்க... (குறு நகைச்சுவை துணுக்குகள்) படம் வரைந்து கதை சொல் (4 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) * படைப்புக்களை பிரசுரிப்பது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.* போட்டிகள்: ஓவியம் வரைதல்: A4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 2 ஓவியங்கள் பொன்விழா மலரில் பிரசுரிக்கப்படுவதோடு, பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். பிரிவு 1 : 6 வயது வரை பிரிவு 2 : 6 - 9 வயது வரை பிரிவு 3 : 9 - 12 வயது வரை பிரிவு 4 : 12 - 15 வயது வரை பிரிவு 5 : 15 - 18 வயது வரை பிரிவு 6 : 18 வயதுக்கு மேல் கோலப் போட்டி: A4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம் தமிழ்க் கோலங்கள் - தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 கோலங்கள் பிரசுரிக்கப்படும். அத்துடன் பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். டெலவர் பெருநிலத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நமது சங்கமம் மலர் சென்றடையும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிபடுத்துங்கள். படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி: editor@tagdv.org தமிழில் தட்டச்சு செய்ய: ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும் https://www.google.com/intl/ta/inputtools தட்டச்சு மற்றும் சந்திப்பிழைத் திருத்தங்கள் செய்ய - dev.neechalkaran.com/p/naavi.html