திருக்குறளில் காதல்
டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் வசந்த கால வாழ்த்துகள்
வசந்தகால வருகைப்பதிவேட்டில்
பெயர் பதித்துச் செல்கின்றன,
பூத்துக் குலுங்கும் மலர்கள் !
சீருடை களைந்த மரங்கள் யாவும்
பூக்களால் நெய்த புத்தாடை போர்த்தி நிற்க,
தானே நிற்கத் தடுமாறும் புட்களின் தலையிலும் பூவாலே கிரீடங்கள்!
காலம் பார்த்து காதல் செய்ய காத்திருப்பது
வசந்த கால புட்களும், பூக்களும் மட்டும் அல்ல!
சங்க காலம் முதல் இன்று வரை தலைவனும் தலைவியும் தான்.
வசந்த காலத்தையும் காதலையும் பிரிக்க இயலுமோ?
காதல் சொல்லும் சங்க இலக்கியங்கள் பல இருந்தாலும், வள்ளுவரின் இன்ப அதிகாரங்கள் தனி சிறப்பு வாந்தவை.
வள்ளுவர் கூறிய காதலை மிக ஆழமாக ஆராய்ச்சி செய்திருக்கிறார் திரு.கிங்ஸ்லி சாமுவேல்.
அவரின் சிறப்புரையை “திருக்குறளில் காதல்” என்ற தலைப்பில் மெய்நிகர் இலக்கியக் கூட்டத்தின் வாயிலாக வழங்க உள்ளோம்.
நாள் : மார்ச் 13, 2021, சனிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி (கிழக்கு நேரம்)
Dial in number – (856) 799-9289
Join the online meeting @ https://tagdv.org/live
Leave A Comment