தமிழ் வரலாறு
TAGDV கடந்த சில மாதங்களாக பல நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை இணையவழி காணொளி மூலமாக வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ் ஆர்வலர்களுக்கும், இலக்கிய நாட்டமுள்ளவர்களுக்கும் விருந்தளிக்கும் விதமாக இணையவழியில் இலக்கிய கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.
வரும் சனிக்கிழமை 05/30/2020 முற்பகல் 11:00 EST நேரப்படி “தமிழ் வரலாறு” என்ற தலைப்பில் முனைவர் தெய்வநாயகம், மூத்த தொல்பொருள் ஆய்வாளர் அவர்களுடன் ஒரு நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தமிழக மூவேந்த பேரரசின் தொடக்கம், வளர்ச்சி மற்றும் விரிவாக்கம், தமிழரின் நாகரிகம் எவ்வாறு தொடங்கப்பட்டது, தமிழரின் வழிபட்டு முறை போன்றவற்றை கலந்துரையாடலாம்.
உங்கள் நண்பர்களுக்கும் நாட்டம் உள்ளவர்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.
Join us on May 30, 2020, Saturday 11am
Dial in number – (856) 799-9289 (no access code required)
Click Here to join the online meeting
Leave A Comment